
நாட்டில் 18 வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ் நாட்டில் நாளை ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
நாளைய தினத் தேர்தலையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவுள்ளனர். எனவே அவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளதாவது:
‘’தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம், நேற்று (17/04/2024) இரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப 807 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 2899 இயக்கப்பட்டன. இப்பேருந்துகளின் வாயிலாக சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.’’ என்று தெரிவித்துள்ளது.
#EditedBySinoj