
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சாய்பல்லவி. இவர் தற்போது தமிழ், மலையாள, இந்தி படங்களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதன்படி ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 21 வது படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில் சாய் பல்லவி கல்லூரியின் படிக்கும்போது விழாவில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் அக்சய்குமார், கத்ரீனா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஜவானி படத்தில் வரும் டீஸ் மார் கான் பாடலுக்கு மாணவியாக இருக்கும் போது, சாய் பல்லவி நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj