
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இவரது 4500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ, அகி ஆக்லிய இசை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதித்து நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில், நிறுவனங்கள் சார்பில், ‘’படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா?’’ என வாதம் செய்தன.
மேலும், ‘’இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 1970, 80,90 களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போதில்லை. இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என நினைக்கிறார்’’ என நிறுவன தரப்பு வாதிட்டன.
இதற்குப் பதிலளித்த இளையராஜா, தரப்பு வழக்கறிஞர், ‘’நான் எல்லோருக்கும் மேலானவன்தான். வீம்பிற்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் ‘’என வாதம் செய்தனர்.
அதற்கு நீதிபதி மகாதேவன் ‘’இசை மும்மூர்த்திகளான தீக்சிதர், முத்துஸ்வாமிம் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால் நீங்கள் அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது’’ என கூறினார்.
இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‘’எல்லோருக்கும் மேலானவன் எனக் கூறியது. பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை’’ என நீதிபதி உங்களுக்கே தெரியும் என வாதிட்டனர்
இவ்வழக்கின் விசாரணை வரும் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#EditedBySinoj