
காதல் தோல்வியில் ஆண் தற்கொலை செய்வதற்கு பெண்ணை பொறுப்பாக முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதலில் தோற்ற ஆண்கள் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், மகன் காதலித்த பெண்ணும் மற்றொரு நபரும் நெருங்கிய உறவின் இருந்ததால் மகன் தற்கொலை செய்ததாக தந்தை புகாரிக்க, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும், ‘’காதல் தோல்வியில் ஆண் தற்கொலை செய்வதற்குப் பெண்ணைப் பொறுப்பாக முடியாது. உடைந்த மற்றும் பலவீனமான மன நிலையில் எடுக்கும் தற்கொலை முடிவுக்கு மற்றொருவரை எப்படி குற்றாம் சொல்லலாம் என கேள்வி எழுப்பியதுடன் தற்கொலை முடிவுக்கு மற்றொருவர் பொறுப்பல்ல’’ என்று தெரிவித்துள்ளது.
#EditedBySinoj