
*இந்த உலக வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் மட்டும் வாழ்ந்து சுகிக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் அவரது பெற்றோர், துணைவி, பிள்ளைகள், நண்பர், ஆசிரியர், ஏன் எதிரிகள் கூட அவரைச் சுற்றி வந்து கொண்டேதான் இருப்பார்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்ற பொன்மொழிகூட உண்டு.
அந்த வகையில் இந்த வாழ்க்கையில் நமக்கு உறவுகள் முக்கியம்.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் ’’உறவுகள் மேம்பட’’ என்ற தலைப்பில்தான் இன்று பேசவிருக்கிறோம்.
ஒரு பாடலை அடுத்து தொடர்பு பேசலாம்…
* பாசமான உறவாக இருந்தாலும், இந்த உறவு மேம்பட முதலில் என்ன செய்யலாம்?
நமக்கான உறவு என்பது அருகிலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக இருக்குமென்றாம் அந்த உறவு அற்புதமாக இருக்கும்…. வாழ்க்கையில் மனதை உந்துதல் செய்யும் காரணிகளில் அந்த அர்ப்பணிப்பான செயலும்கூட உன்னதமான வரமாக அமையும்! நம்மை விழாமல் ஓர் இயந்திரம் போல் நம்மை இயக்கும் சக்தியாகவும் அது அமையும்.
*உறவுகள் ஆழம் கொண்டதாக இருக்கும்போது, லேசான புரிதல் இன்மை ஏற்படும்போதுகூட அங்குப் புயல் வீச வாய்ப்பிருக்காது.
எந்த உறவிலும் ஆழ்ந்த புரிதல் உள்ள போது அங்கு ஆழ்கடல் போன்ற அமைதி மேலோங்கும். அந்த உறவும் நீடித்திருக்கும்….அலைகள் போல சிறிதான சலசலப்பிற்கும் சந்தர்ப்பம் இருக்காது.
ஒரு பாடலை அடுத்து தொடர்ந்து பேசுவோம்…
*எல்லோருக்கும் உறவுகள் இருக்கும். உறவுகள் இன்றி யாரும் தனித்து வாழ முடியாது. அதனால் தான் நாம் வாழுகின்ற சூழலை சமூகம் என்று கூறுகிறோம்.
அப்படி பல மனிதர்கள் இருக்கும் உலகில் நாம் யாரிடம் நட்புடன் தொடர்பு கொண்டாலும் அந்த உறவு மேலோங்கிட விட்டுக் கொடுத்தல் இருக்கும்போது ஈகோ தலைதூக்காது. இந்த ’மனப்பான்மைதான் அனைத்திற்கும் ஆரம்பப் புள்ளியாக அமையும்.
இதுவே தொடர்ந்து உறவினை சங்கிலி போலக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருவியாக இருக்கும். ஒரு பாடலை அடுத்து தொடர்ந்து பேசுவோம்….
*இந்த வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்துள்ளது. இன்பதை ஓர் ஆடையாக்கி தினமும் அணிந்து கொண்டிருப்பவர்களும் இல்லை. அதே ஆடையை அணிய முடியாமல் தவிப்பவர்களும் கிடையாது.
இதெல்லாம் மனதிற்கு நாமாமே ஏற்படுத்திக் கொள்ளும் உணர்களின் தாக்கமே.
ஒரு பாடலை அடுத்து தொடர்ந்து பேசுவோம்….
*இந்த இன்பம் மற்றும் துன்பத்தை அனுபவிக்காதவர்கள் யாருமில்லை. சிலர் இதிலிருந்து படிப்பினைகள் கற்று முன்னேறுவர்.
சிலர் எது நடந்தாலும் காரணம் சொல்லி காலத்தை வீணடிப்பர். எனவே வருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு, இருப்பதை சமாளித்து, அதிலிருந்து மீண்டு வர சிந்தித்துச் செயல்பட்டால் சிக்கலின்றி எந்த உறவும் நீடித்திருக்கும்.
*இந்த வாழ்க்கை போராட்டமாவது எதனால் தெரியுமா? மரியாதை பண்பு, பக்குவமின்மை போன்றவை இருப்பதால்தான்….
நமக்கு என்ன இந்த சமூகம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் இந்த சமூகத்திற்கும் கொடுக்கும்போது அங்கு போராட்டத்திற்கு வாய்ப்பிருக்காது.
மனதில் சமாதானமும் அமைதியும் தான் நிலைத்திருக்கும். இதேயேதான் உறவிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
அது வாழ்வை செடியில் மலரும் பூக்கள் போல நம்மையும் மகிழ்ச்சியுடையவர்களாக்கும்.
*ஒன்று தெரியுமா? இந்த அன்பு என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ளது.
ஆனால், அதை வெளிக்காட்டத்தான் தயங்குறோம்…
அப்படி இந்த அன்பைக் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் நாம் நமது வார்த்தைகளில் கவனம் செலுத்தினால் அது நம் மனதில் காவியப் பாடல்களைப் போல காலத்திற்கும் நிலைத்திருக்கும்.
*இந்த உலகமே அன்பிற்கு மட்டுமல்ல பாராட்டிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்கியுள்ளது.
எனவே, அம்மாவின் சமையல், அப்பாவின் உழைப்பு, குழந்தையின் படிப்பு, நமக்கு பேருந்தில் உட்கார சீட் தரும் நபருக்கு புன்முறுவலுடன் நன்றி என ஒவ்வொரு வருக்கும் அவரது செயலை உணர்ந்து, அதில் அவர் செலுத்திய உழைப்பை அறிந்து பாராட்டுகின்றபோது, அவர்கள் உள்ளம் குளிர்வதை அவர்களின் கண்களிலும் முகத்தில் ஒளிரும் புன்னகையிலும் காணலாம்.
*ஒரு விஷயத்தில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும்போது கோபத்தில் வார்த்தைகளை கொட்டாமல் பூக்களை கிள்ளும்போது செடியின் அமைதி மாதிரி அமைதியாக இருக்கும்போது தன் மேல் தவறில்லை என்றாலும் வாக்குவாதத்திற்கான காரணத்தை ஆராய்தலுக்கு நேரம் கிடைக்கும். தாமதம் ஆயினும் உறவில் நிச்சயம் பிணக்கு நீங்கும்.
*ஒருவர் செய்த உதவி சிறிதோ பெரிதோ…ஆனால் காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதை ஆராய்ந்தால் உலகைவிட பெரியது என்கிறார் செய் நன்றி அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர். அடுத்த குறளில் அந்த நன்மையை ஆராய்ந்தால் அது கடலைவிட பெரிது என்கிறார். அதனால் உதவி செய்வோம். செய்யும் உதவியை நினைவுகூர்வோம்.
வாழ்க்கையில் உறவுகள் மேம்பட இதெல்லாவற்றையும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு குணங்கள் என கடைபிடித்தால் நமக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படும், நாமும் நம் உறவும் மேம்பட இவை உதவும்.
#சினோஜ்