
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ரத்னம். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, பிரியா பவானி சங்கர், யோகிபாபு, கெளதம் மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் ’டோண்ட் வெரி மச்சான்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இப்பாடல் இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில், விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள மாதிரி, நடிகர் விஷாலும் தேர்தலில் பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஷாலிடம் பேட்டியின்போது, நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம், பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், வரலட்சுமியை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தெலுங்கில் தனக்கென ஒரு மார்க்கெட் உருவாக்கியுள்ளார். சமீபத்தி அவர் நடித்த ஹனுமன் படம் பார்த்தேன். சமீபத்தில், நடிகை வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழிலபதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது… நீண்ட நாள் காதலர்களாக இவர்கள் திருமணம் பந்தத்திற்குள் நுழைய இருக்கின்றனர்.
இதற்கு முன்பு, விஷால்- வரலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைபெறவில்லை.
எனவே நீண்ட நாட்கள் கழித்து வரலட்சுமி பற்றி, விஷால் முதல் முறையாக மனம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.