
இன்னும் மக்களவை தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் திமுக, விசிக, சிபிஎம் கட்சிகள் இணைந்துள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் கமல், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நேற்று நடிகர் கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: படர்தாமடை உடலுக்குக் கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்குக் கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று கூறினார்.
மேலும், உலகில் பொய் சொல்கிறவர்களுக்கு போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், 2வது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என்று கூறினார்.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.