
சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் அதிரடி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லாதவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்த நிலையில், எலான் ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தெரிவித்துள்ளதாவது:
எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட மற்றவர்களின் பதிவுகளுக்குப் பதில் அளிக்க லைக் மற்றும் புக் மார்க் செய்ய கட்டணம் வசூலிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், போலிக் கணக்குகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என மஸ்க் கருத்து கூறியுள்ளார்.

தற்போது நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்-ல் நடைமுறையில் உள்ள நிலையில், இந்தக் கட்டண வசூல் விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.