
18 வது மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. எனவே அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த அண்ணாமலையிடம், அதிமுகவும், திமுகவும் உங்களை எதிர்ப்பதில் சேர்ந்து இயங்குகிறார்களே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அதிமுக- திமுக மட்டுமல்ல, தமிழக அரசு உயரதிகாரிகள், உளவுப்பிரிவு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், பெரிய பண முதலைகள் என அனைவரும் சேர்ந்தே இயங்குகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும்,எந்தச் சூழலிலும் நான் அல்லது நீதான் இருக்க வேண்டும். இதைத்தவிர வேறு யாரும் அரசியல் களத்தில் நுழைந்துவிடக் கூடாது என்பதில் இரு திராவிட கட்சிகளும் தெளிவாக உள்ளன. இதனால் நான் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் இருவரும் கூட்டாகச் செயல்படுகின்றனர். இந்தச் சதியை உடைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.