
தமிழ் நாட்டில் வரும் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் உருகாக்கப்பட்ட ரோபோவிடம் தனது வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார்.

இருவருக்கும் இடையிலான உரையாடலில், என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன் என்று அவர் கூற, அதற்கு ரோபோ, எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். இரண்டு மாநில கவர்னராக இருந்து,
தற்போது நீங்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து, தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்று கேட்டார். அதற்கு ரோபோ, தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதைத் தரமுடியும் என நம்புகிறார்கள்.
நீங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள்.. வாழ்த்துகள்.. ”தென் சென்னைக்கு அக்கா வந்தாச்சு, முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சு” என்று என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.