
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளின் மறுமண விழாவில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்தியாவின் முன்னனி இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, திரையங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின.
தற்போது கமல், கஜோல், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் இந்தியான் -2 படத்தையும், ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில்,ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித்தை(29) திருமணம் செய்தார்.
ஆனால் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து ஷங்கரின் மூத்த மகள் விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யாவுக்கும், ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, இவர்களின் திருமண அழைப்பிதழை பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்களுக்கு இயக்குனர் ஷங்கரும், அவரது பாய்ஸ் பட ஹீரோ பரத், இளைய மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து இருவருக்கும் சென்னையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு திருமணத் தம்பதியினரை வாழ்த்தினார்.
#EditedBySinoj