
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பில் மா நில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி பாடுபடுவதோடு, தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவதாக’’ உறுதியளித்துள்ளனர்.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.