
‘’நீட் தேர்வை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நடத்துகிறது. போலி மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ் நாட்டில் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இம்முறையும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சமீபத்தில் ஒரேமேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். வேட்பு மனுதாக்கலும் நடைபெற்றது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இன்று பிரசாரம் மேற்கொண்டு வரும் சீமான் கூறியதாவது;
‘’ நீட் தேர்வை அமெரிக்காவில் உள்ள ஒரு நிருவனம் நடத்துகிறது. போலி மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசுதான் வரியைக் கொண்டு வந்தது. இங்குக் கட்சி அரசியலும், தேர்தல் அரசியலும் தான் இருக்கிறது. மக்கள் அரசியல் இல்லை. ஆட்டை பலி கொடுப்பதும், முன் இரை கொடுப்பது போல விலையைக் குறைக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
#EditedBySinoj