
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ் நாட்டில் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாலர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவரரும் வயநாடு ( கேரளா) தொகுதி வேட்பாளருமான ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏபிபி-சி வோட்டார் கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 52சதவீதம் வாக்குகளைப் பெற்று, 39 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அதிமுக கூட்டணிக்கு 2 சதவீதம், பாஜக கூட்டணிக்கு 19 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் எனவும். இந்த வெற்றியின் மூலம் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக இடம்பெறும் என தகவல் வெளியாகிறது.
இது இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#EditedBySinoj