
இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் மீது சமீபத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது.
இதில் இரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிப் படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், 100க்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30க்கும் மேற்பட்ட தரைவழித் தாக்குதல் நடத்தும் ஏவுகனைகள் மற்றும் 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்களைக் கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குல் நடத்தப்பட்டது.
மேலும், இஸ்ரேலின் சரக்குக் கப்பல் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இஸ்ரேலின் நெகவ் பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது 4 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பெரிய பாதிப்பில்லை என ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான்’’ இஸ்ரேல் மீது 7 ஹைப்பர் சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவரை இடைமறித்து அழிக்கப்படவில்லை என தெரிவித்தது.
இதற்கிடையே, 79 ஆளில்லா விமானங்கள் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்கா ராணுவம் தாக்கி அழித்தது என அமெரிக்கா அதிகாரிகள் கூறினர். இதை இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதி செய்துள்ளார்.
#EditedBySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்யுங்கள்….