
ஐபிஎல்-2024, 17வது சீசன் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தற்போது லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தொடரில் 29 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் அணிகளின் புள்ளிப்பட்டியல் நிலை என்ன என்பதைப் பற்றி கான்போம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி6 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. எனவே 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடச் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில், கொல்கத்தா 2 வது இடத்திலும், சென்னை கிங்ஸ் 3 வது இடத்திலும் உள்ளன.
ஐதராபாத் அணியும், லக்னோ அணியும், குஜராத் அணியும் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில், ஐதராபாத் அணி 4வது இடத்திலும், லக்னோ அணி 5வது இடத்திலும், குஜராத் அணி 6வது இடத்திலும் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 7,8 மற்றும் 9வது இடத்தில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடி இதுவரை 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
#EditedBySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்யுங்கள்….