டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் தெலுங்கானா மா நில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டுமெனக் கோரி கவிதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.
இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கவிதா செய்தியாளர்களிடம், ”பாஜக தலைவர்கள் வெளியில் பேசுவதையே சி.பி.ஐ அதிகாரிகள் தன்னிடம் மீண்டும் கேட்கின்றனர்.
நான் இருப்பது சி.பி.ஐ கஸ்டடியில் இல்லை. பாஜகவின் கஸ்டடியில்” என்று விமர்சித்துள்ளார்.
#EditedBySinoj