
ஆப்கானிஸ்தான் நாட்டில் வரும் நாள்களில் 34 மாகாணங்கலில் அதிகமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு பருவகால மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் கடந்த 3 நாட்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து இயற்கைப் பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபன் செய்தித் தொடர்பாளர் அப்துல்லாக் ஜனன் சைக் கூறியதாவது:
தலைநகர் காபூர் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் 600க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால் நடைகள் உயிரிழந்தன. இந்த வெள்ளத்தால் சுமார் 800 ஹெக்டேட் நிலங்கள் மற்றும் 85கி.மீ தூரத்திற்கு சாலைகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக இந்த வெள்ளத்தால் மேற்கு பரா, ஹெராத், தெற்கு ஜாபுல் மற்றும் காந்தஹார் ஆகிய மாகாணங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்யுங்கள்….