
ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூடுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்னா முராரி, எம்.ஆர்.ஷா மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் மீது அவதூறான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளைக் கொச்சைப்படுத்தும் நயவஞ்சகமான முயற்சிகள் சில குறிப்பிட்ட குழுவினரால், மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூகப் பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நீதிமன்றங்கள் கையாளும்போது, நீதித்துறையின் சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் சில குழுவின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#EditedBySinoj