
நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன.
இதனால் அனைத்து மா நிலங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
பணப்பட்டுவாடாவை தடுக்கவும், பரிசுப்பொருட்கள் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முன் இதுவரை இல்லாத அளவில் ரூபாய் 4560 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் ரூ.778 கோடியும், குஜராத் மா நிலத்தில் ரூ.605 கோடியும், தமிழ் நாட்டில் ரூ.460 கோடி பறக்கும்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.