
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்றைய பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நான் பாடுபட வேண்டும்.
அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தோம். காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று கூறவில்லை என்று கூறினார்.
மேலும், இந்தியா முழுவதும் 444 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியவர் பிரதாமர் மோடி; மத்திய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் , எம்பிக்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் பிரதமர் மோடியின் அரசு ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
#EditedbySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam இணையதளப் பக்கத்தையும் இதன் Social Media pages-ஐயும் follow செய்க.