
மும்பையில் டிக்கெட் பரிசோதகரின் கையைக் கடித்த பெண் கடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று முன் தினம் மதியம் புறப்பட்டுச் சென்றது.
அந்த ரயில் தகிசர்-மிராரோடு இடையே சென்றபோது அங்குள்ள ரயில்பெட்டியில் அதிரா சுரேந்திர நாத் (26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் சோதனை செய்து கொண்டிருந்தார்.
அதேபெட்டியில் இருந்த நைகாவை சேர்ந்த சிங் என்ற பெண் பயணியிடம் டிக்கெர் பரிசோதகர் டிக்கெட் கேட்டார்.
அதற்கு அவர், தன் கணவர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய டிக்கெட்டை காண்பித்தார். இது செல்லாது என்று டிக்கெட் பரிசோதகர் கூறி, ரயில் நிலையத்தில் இறங்கும்படி அவரிடம் கூறினார்.
இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதன்பின்னர், ரயில் நிலையம் வந்ததும் அப்பெண் டிக்கெட் பரிசோதகர் அதிரா கரேந்திர நாத்தின் கையைக் கடித்துவைத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.டிடிஆர். சத்தம் போட்டத்தை அடுத்து பயணிகள் அப்பெண்ணை பிடித்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
#EditedBySinoj