
விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’தி கோட்’.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேது விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் நிலையில், இன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் பாடியுள்ள ‘தி கோட்’ பட முதல் சிங்கில் ’விசில் போடு’ என்ற பாடல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம், விஜய் மற்றும் வெங்கட்பிரபு அறிவித்தனர்.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு ’விசில்போடு’ பாடல் டி சீரிஸ் யூடியூப் தளத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 -ல் உள்ள விசில் போடு பாடலை இதுவரை 30 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#EditedBySinoj
https://twitter.com/archanakalpathi/status/1779524590672474563/photo/1