
கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக வரும் 18 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீது இந்தியா கூட்டணி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருத்துகள் கிடைக்கும்.
2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் கெளரவ தினமாக அறிவிக்கப்படும்.
70 வயதிற்குட்பட்ட அனைவரும் ஆயுஸ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும்,ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்லலாம்.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடிப் பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும்.
குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
#EditedBySinoj