
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது. சமூக நீதி பேசக்கூடாது எனவும் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று கூறும் பாஜக உடன் பாமக கூட்டணி வைப்பதுதான் மற்றம், முன்னேற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியா கூட்டனி வெற்றி பெற்றால் தமிழ் நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகள் நீக்கப்படும்;
வரும் தேர்தலில் நவீன முறையில் கொள்ளை அடிக்கும் பாஜக வீழ்த்த வேண்டும். இந்த தேர்தல் சமூக நீதிக்காகப் போராடும் சக்திகளுக்கு எதிரான ராணுவ ஆட்சியை கொண்டு வரத் துடிக்கும் சக்திகளுக்கு இடையேயான போர் என்று தெரிவித்துள்ளார்.