
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா-2024, இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகின் அதிகம் பேர் கண்டுகளிக்கும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட10 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் கோலியின் வசம் உள்ளது. நடப்பு தொடரில் கோலி 319 ரன்கள் எடுத்துள்ளார்.
இதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப் பட்டியலில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார்.