
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா-2024, இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகின் அதிகம் பேர் கண்டுகளிக்கும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட10 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மோதவுள்ளது.
இந்தப் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், அவருக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்தது.
இது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மைதானத்திலும் ரசிகர்கள் எதிர்வினை ஆற்றிவருவது தெரிகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை என நியூசிலாந்து முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
’’ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முதல் வீரராக பந்து வீசிய ஹர்த்திக் பாண்ட்யா, அடையாளம் பதித்திருந்தார். ஆனால் தற்போது அவர் பவுலிங் போடுவதில்லை. ஹர்த்திக் பாண்ட்யாவிடம் ஏதோ சரியில்லை என்று கூறிக் கொள்கிறேன். அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஹர்த்திக்கிடம் ஏதோ சரியில்லை என்பது நிச்சயம் எனக்குத் தெரியும். இதை என் உள்ளுணர்வு கூறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.