
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும், வேட்பாளரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தன் கட்சியை பாஜகவுடன் இணைந்தார். இது அரசியலில் பரப்பான பேசப்பட்டது.
இதையடுத்து, சேலம் பாஜக மா நாட்டில் பிரதமர் மோடியை சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் மேடையில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், விருது நகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதே தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் விஜய பிரபாகரனும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், விருது நகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் நேற்று நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது சரத்குமார் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், ஹெல்மெட் போடாமல் ராதிகாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகிவருகிறது.
#EditedBySinoj