
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது.
இன்னும் பணிகள் துவங்கப்படாததால், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இதுகுறித்து மத்திய பாஜக அரசை விமர்சித்து வந்தன.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரப் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கிமீ சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரூ. 21 கோடியில், 6 கிமீ மீட்டருக்கு சாலைகள் நிறைவடைந்துள்ளது. கட்டுமானப் பணிகளை எல் 7 டி நிறுவனம் தொடங்கியதாக எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டாலும், எய்ஸ்ம் மருத்துவமனைக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj