
நடிகர் கமல்ஹாசன் இன்று பிரபல இயக்குனர் மெக்சிகன் திரைப்பட இயக்குனர் அல்போன்சா குரோனை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டு ஆண்டுகளாக முன்னணி நடிகராகவும் ஹீரோவாகவும் நடித்து மக்களவைக் கவர்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.
இவருக்கு மட்டும் நேரம் கிடைக்கிறதோ என்று யோசிக்கும்படி, அவர் ’இந்தியன் 2’ மற்றும் ’தக்லைஃப்’ படங்களில், இயக்குனராகவும், தயாரிப்பாளரும், பிக்பாஸ் தொகுப்பாளராகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் ’மக்கள் நீதி மையம் கட்சி’ இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ் நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று பிரபல இயக்குனர் மெக்சிகன் திரைப்பட இயக்குனர் அல்போன்சா குரோனை சந்தித்துள்ளார்.
கிராவிட்டி, ரோமா போன்ற அவரது திரைப்படங்களுக்காக 5 ஆஸ்கர், 7 பாஃப்டா மற்றும் 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர் அல்போன்சா குரோன் ஆவார்.
இவர்கள் இருவரின் சந்திப்பு இந்திய சினிமாவில் பேசு பொருளாகியுள்ளது.