
என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளது திமுக. எனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கேரளம் மாநிலம் வயநாட்டில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள நேற்று தமிழ்நாடு வருகை புரிந்தார்.
நேற்று கோவை மாவட்டம் சிங்கநல்லூர் ஜங்ஸ்சனில் உள்ள காமராஜ் சாலையில் உள்ள’ ஸ்ரீ விக்னேஸ்வரா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ்’ கடைக்குச் சென்று ‘1 கிலோ குலாப் ஜாமுன் ‘வாங்கினார்.
இதுகுறித்து, அவர் என் மூத்த அண்ணன் ஸ்டாலினுக்கு இந்த இனிப்புகள் வாங்கியுள்ளேன். நான் வேறு எந்த அரசியல்வாதிகளையும் நான் சகோதரர் என்று அழைப்பதில்லை என்று நெகிஞ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் எக்ஸ் தளத்தில், ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வாங்கி வந்த வீடியோவை பகிர்ந்து, ”என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜுன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியைத் தரும் எனவும் உறுதியளித்து, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” எனக் குறிப்பிட்டுட்டுள்ளார்.
Edited By Sinoj