
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று விஜய் கட்டிய கோயிலில் ஷோபா அம்மாவுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
சமீபத்தில் நடிகரும் #தமிழகவெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் சென்னை கொரட்டூரில் அவருக்குச் சொந்தமான இடத்தில் தன் தாயார் ஷோபாவுக்காக #சாய்பாபா கோவிலொன்றைக் கட்டிக் கொடுத்தார்.
இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னணி நடிகர் #ராகவாலாரன்ஸ் தன் நண்பர் விஜய் கட்டிய கோவிலுக்கு #ஷோபா அம்மாவுடன் வந்து சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளை அவர் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது வைரலாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யு, ராகவா லாரன்ஸும் #திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj