
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், தன் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டுமெனக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா நேற்று தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், டெல்லி ஐகோர்டு தீர்ப்பை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரிக்க வேண்டுமென ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிரான தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை வரும் 15 ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
கைது நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால் டெல்லி முதல்வர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க நேரிடலாம்; கைது நடவடிக்கையை தவறு என்றால் சிறையில் இருந்து வெளியே வந்து, மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்பி., சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், இதேவழக்கில் கவிதா சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj