
*இந்த உலகில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த வெற்றி பெறுவதல் பற்றித்தான் இன்றைக்குப் பேசப் போறோம்.
*சபதத்தை நிறைவேற்றுவது; லட்சியத்தை அடையவது, தேடுதலில் தீவிரமடைவது…கார், பங்களா,வசதியோடு வாழ்வது மட்டும்தான் வெற்றி என்பதில்லை. ஒவ்வொரு துறையிலும், வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றி சொந்தமானது.
*பொதுவாக இந்த உலகத்தில் ஒரு பெரிய இலக்குகள் நிர்ணயித்து, ஒரு கடும் பயணம் செய்து, சிகரத்தை அடைவதுதான் வெற்றி, ஒரு போட்டியில் பரிசு பெருவதுதான் வெற்றி எனக் கூறப்படுது. அதை அப்படித்தான் வகைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், உன்னை நீயே அறிதல் என்பதுபோல் நம்மை முதலில் அறியனும். நமக்குள்ள என்ன திறமை இருக்குன்னு உணரனும். இதை செய்வதே முதல் வெற்றிதான்!
*இந்த வெற்றியை பெரிய ஒரு பிம்பமாக மாற்றிப் பார்க்க வேண்டும் என அவசியமில்லை. அது எளிமையாகவும் இருக்கலாம் அல்லவா?
*எதனால் தோல்வியை விட வெற்றிக்கு மதிக்கு அதிகம்? வெற்றியால் பரிசு கிடைக்கும், சமூகத்தில் மாலை, மரியாதை கிடைக்கும் என்றால் தோல்வி அடைவதால் நல்ல அனுபவங்களும் கிடைக்கும். ஆனால், நாம வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் தோல்வியே அடையக்கூடாது என எண்ணுவதும் கூட வெற்றியின் மீதான மதிப்பை அதிகரிக்கிறது இல்லையா?
*தரையில் தவழும் குழந்தை எழுந்து தானே நிற்கும் போது அடைகின்ற மகிழ்ச்சி மாதிரி ஒரு பறவை கடல்தாண்டி கண்டம் விட்டு கண்டம் செல்வது மாதிரி ஒருபெற்றோர் தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளையை படிக்க வைத்து, ஆளாக்கி, தேர்வு எழுதி, அவருக்கு ஒரு அரசு வேலை கிடைத்ததும் அடையும் மகிழ்ச்சியில் அவர்களின் அத்தனை ஆண்டு உழைப்பின் வெற்றி அடங்கியுள்ளது.
* தன் வேரில் நீரை உறிஞ்சிக் கொண்டு, தலையில் பூவைக் கொடுப்பது செடியின் வெற்றி! கார்பண்டை ஆக்சைடை உள்வாங்கிக் கொண்டு ஆக்சிஜனை உயிரிகள் சுவாசிக்க வெளியிடுவது மரங்களின் வெற்றி ! அதுபோல பெரிதாக ஒன்றும் இல்லை…. தான் செய்யும் வேலையில் முழு திருப்தி அடைவதுதான் மனிதனின் வெற்றி!
ஒரு பாடலுக்குப் பிறகு தொடர்ந்து பேசுவோம்
*வெற்றி என்பதை எதனாலும் நிர்ணயிக்க முடியாது. அது நாம் நினைத்தால் செய்து விடக் கூடியதுதான். அந்த வெற்றியை அடைய நாம் நமது உடலை பேணுவது.ஆரோக்கியத்தோடு வாழ்வது…. நாம் விரும்பதை செய்தல், முக்கியமாக விரும்பும் ஒன்றைச் செய்யும் போது அதில் கவனம் குவித்தல் இதெல்லாம் சரியாகச் செய்வதும் வெற்றியின் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.
ஒரு பாடலுக்குப் பிறகு தொடர்ந்து பேசுவோம்
…
*விலங்குகள் காட்டில் உயிர்வாழவும் மற்ற விலங்குகளிடம் இருந்து தமது உயிரைக் காப்பாற்றவும், வேட்டையாடி உணவைப் பெறவும் தொடர்ந்து போராடும்.
அதேபோல், போராட்டம் நிறைந்த இந்த உலகில் நாம் அன்றாடமும் நம் வாழ்க்கையை நடத்துவது ஒன்றும் சாதாராணவிஷயமல்ல.
இங்கு யாராக இருந்தாலும் எந்திரமயமான இந்த உலகத்தில் நாம நம்ம வாழ்க்கையை நடத்த உழைத்து, குடும்பத்தை பேணி, தினமும் எப்படி வாழ்வது என்று பாடம் கற்றுக் கொள்வதும்கூட ஒரு வெற்றிதான்.
* நீயா? நானா? யார் ஜெயிக்கப் போவது… என?எதேனும் ஒரு களத்தில் போட்டியிட்டுத்தான் வெற்றி என்பது மட்டுமே நமது நினைவில் இருந்தால் உலகமே போரால் மூழ்கிவிடும்.
இருப்பதைக் கொண்டு திருப்தி காண்பது, மகிழ்ச்சியோடு வாழ்வது… யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வது..முடிந்தால் பிறருக்கு உதவுவது இதுவும் கூட வெற்றிதான்! ஏனென்றால் இதைச் செய்யாதவர்களுக்கு மத்தியில் நாம் செய்யும் சிறு உதவியும் கூட இந்த சவாலான உலகில் நாமே நம்மை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அல்லவா?
*ஒருமனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது; நோய் வந்தாலும் அதிலிருந்து மீண்டுவருவது; சவால்களை ஏற்றுக் கொண்டு வாழ்வது, முடிந்தால் அந்தச் சவாலை முறியடிப்பது; சொல்லப் போனால் எதற்கும் பயந்து நடுங்காமல், எதுவரினும் துணிந்து வாழ்வதும்கூட வெற்றிதான்!
*வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை. ஒருதுறையில் நிபுணராகவும் இருக்க தேவையில்லை. பணம் மற்றும் பின்புலனும் வேண்டாம். அந்த வெற்றி ஊர்- உலகம் புகழ்வதாக மட்டும்தான் இருக்கனும் என்ற அவசியமில்லை.
அந்த வெற்றிக்குச் சொந்தக்காரர் அது நம் பக்கத்து வீட்டுக் காரராகவும் இருக்கலாம், வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் மாணவராகவும் இருக்கலாம். நம்மோடு பழகியவராகவும் இருக்கலாம். அவர்களின் செயல் ஒரு நிமிடம்தான் என்றாலும், அதனால் நன்மை என்றால், அது அவர்களுக்கு திருப்தி அளிக்குமாயின், அதுவே முழு வெற்றி.
ஊடகவியலாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,
எழுத்தாளர்- சினோஜ்