
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து, தனது கடைசிப் படமாக விஜய்69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் சாய்பாபா கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
அந்த கோயிலுக்கான கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. தாவது விஜய்க்கு சொந்தமான இடத்தில் புதிதாக சாய்பாபா கோயிலை கட்டி, கடந்த பிப்ரவரி மாதமே கும்பாபிஷேகம் நடத்தி முடித்துள்ளார்.

கொரட்டூரில் அவருக்கு சொந்தமாக இடத்தில் சுமார் 15 கிரவுண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தில், விஜய்யின் தாயார் ஷோபாவும், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டனர். இக்கோயிலை தன் தாயாருக்காக விஜய் கட்டியதாகக் கூறப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வழிபடும் இந்தக் கோயிலில் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.