
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில்’ தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் யுவன் இசையில், விஜய் இப்படத்தில் பாடல் ஒன்றை பாடியதாக தகவல் வெளியானது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.110 கோடிக்கு கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில்,’ தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் ‘படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.