
சமீப காலத்தில் நடிகர்கள் மாரடைப்பால் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் முரளியின் தம்பி டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.
இந்த நிலையில், அழகி, தென்றல் போன்ற பல டிவி தொடர்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் அருள்மணி.
இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தது மட்டுமின்றி,பேச்சாளராகவும் வலம் வந்தார்.

இந்த நிலையில், சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்ததுடன், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. அவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் தங்கர் பச்சானின் அழகி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.