
பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி குண்டுவெடித்தது.
இதில், உணவகப் பணியாளர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, கடந்த மார்ச் 3 ஆம் தேதி என்.சி.ஏ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிக்கமளூரூவை கலாசா பகுதியைச் சேர்ந்த முஸாமில் ஷெரீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதில், முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹூசைன் ஹாஜிப்(30). மற்றொரு குற்றவாளி அப்துல் மதீன் அகமது தாஹாவையும்(30) தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள பகுதியில் பதுங்கியிருந்த முசாவிர் ஷாஜிப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹாவை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.