
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், திமுக, அதிமுகவுக்கு போட்டியாக பாஜக தலைமையில், பாமம, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவதற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாட்டிற்கு வருகிறார்.
அவரை வரவேற்கும் வகையில் பாஜகவில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று குறிப்பிட்ட ஒட்டப்பட்ட போஸ்டரில் அமித்ஷா புகைப்படத்திற்குப் பதிலாக குணா படத்தை இயக்கிய, கமலின் நண்பர் சந்தான பாரதியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர்.
இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.