
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்69 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இது இவரது சினிமா கேரியலில் கடைசிப் படம் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 ஆம் தேது சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி, கட்சி உறுப்பினர் சேர்க்கையையும் ஸ்மார்டாக ஆரம்பித்தார் விஜய்.
இவரது அரசியல் வருகை பற்றி பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்த வகையில், நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறியதாவது; ’’விஜய்யின் அரசியல் முடிவு பெரிய விஷயம். அந்த துணிச்சலுக்காக அவரை பாராட்ட வேண்டும். மார்க்கெட் போய்விட்டது அதனால் அரசியலுக்கு வருகிறார் என்று பழி இல்லை. இவ்வளவு சந்தோஷம், அரியணையை விட்டுவிட்டு புத்தன் மாதிரி ஒருத்தர் வருகிறார் என்றால் அவரைக் கைதூக்கி விட மக்களுக்கு எண்ணம் வரும். அரசியலையே பணத்திற்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மத்தியில், பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு ஒருத்தர் வருகிறார் என்றால் பொதுமக்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும்’’ என்று விஜய்யைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.