
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவின். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
அதன்பின்னர், விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி பிக்பாஸ் 3 ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
இவர் பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர். இவர் ஹீரோவாக நடித்த டாடா படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது எலான் எழுதி, இயக்கி வரும் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். இப்படத்திற்கு யுவன் சங்க ராஜா இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கவின் பொது நிகழ்ச்சிகளுக்கு பவுன்சர்களுடன்தான் வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவரது ஷூட்டிங்கில் சிலர் அத்துமீறி நுழையவே பவுன்சர்களை அவர் திட்டியதாகவும், ஒரு ஷூட்டிங்கின்போது, அப்பட ஸ்டண்ட் மாஸ்டருடன் அவர் சண்டை போட்டதாகவும் தகவல் வெளியாகிறது.
ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே ஸ்டண்ட் மாஸ்வர்களிடம் நட்பு பாராட்டி ஆசீர்வாதம் பெறும் நிலையில்,கவின் இப்படி நடந்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.