
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் உள்ள தேவாலத்திற்குள் மெழுகு ஏற்றி பிரார்த்தனை செய்த நபர் ஒருவர், அங்கிருந்த காணிக்கை உண்டியலை திறந்து அதிலிருந்து பணம் முழுவதையும் திருடினார்.
உடனே ஒரு பெண் ஆலயத்திற்கு வருவதைப் பார்த்தபோது, காணிக்கை போடுவது மாதிரி ஆக்சன் செய்துவிட்டு அங்கிருந்து அப்பாவி போல் நகர்ந்து சென்றார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபரின் செயலுக்கும் கண்டனம் குவிந்து வருகிறது.
என்ன நடிப்புடா சாமி இது என அவரை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.