
விஜய் வரகொண்டாவின் அடுத்தடுத்த படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறுவதில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய்தேவரகொண்டா நடிப்பில், பரசுராம் இயக்கத்தில் வெளியான படம் ஃபேமிலி ஸ்டார்.
இப்படத்தை விஜய்யின் வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரித்தது. இப்படம் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான நிலையில், இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.
இதற்குக் காரணம் இப்படம் பற்றிய நெகட்டின் ரிவியூக்கள்தான் காரணம் எனக் கூறப்டுகிறது.இதனால் கோபமடைந்த படக்குழு, நெகட்டிவ் ரிவியூ கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்தேவரகொண்டா ஒருபடி மேலேபோய், ரிவியூ கொடுத்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்கள் மீது புகார் அளித்துள்ளாராம்.
இப்படம் ரூ.90 கோடியில் எடுக்கப்பட்டு, ரூ.30 கோடி கூட வசூலாகவில்லை என தகவல் வெளியாகிறது.