
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் வேட்டையன். இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியுடன் இப்படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், பகத்பாசில், ராணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படம் போன்று இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் சூப்பர் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இப்படம் அக்டோபரில் ரிலீஸ் என போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில், ஒரு பேட்டியில் நடிகர் பகத்பாசில் வேட்டையன் படத்தில் தான் ஒரு காமெடி வேடத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் சீரியஸான கேரக்டர்களில் நடித்த பகத்பசில் காமெடி வேடத்தில் நடித்துள்ளதை, அதுவுடன் ரஜினியுடன் நடித்துள்ளதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.