
டெல்லியை தலைமயிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நவசமாஜ் அமைப்பு. இந்த நிலையில், திண்டுக்கல் நவசமாஜ் தொடக்க விழா தாடிக்கொம்பு நகரத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் அருகே உள்ள பிரமாண்ட அரங்கில், அதன் மாநில தலைவர் பேராசிரியர். முனைவர் மா.அன்பானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில செயலாளர் பன்வார் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளர் பாலச்சந்தர் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில், மாநில இணைச் செயலாளர் அரிமா.மதிவாணன், முக்கியத் தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, வழங்கி கௌரவித்துள்ளதால், பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் மாநில செயலாளர் பன்வார் பொருளாளர் சேகர் பாபு, அமைப்பு செயலாளர் பாலச்சந்தர், மாநில இணைச் செயலாளர் அரிமா.மதிவாணன் செயற்குழு உறுப்பினர் அரிமா சண்முகம் திருமதி மகேஸ்வரி அன்பானந்தம், திருமதி பாரஸ்தேவி பண்வார் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் முனைவர். பழனி குமார், நாமக்கல் மாவட்டம் சிவராஜ் கரூர் மாவட்ட ராஜு , ஈரோடு மாவட்ட தலைவர் அன்பழகன், பாண்டிச்சேரி பொருளாளர் புருஷோத்தமன் நாகை மாவட்ட பிச்சைமுத்து திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த உறவுகளும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.