
கோவையில் நீட் தேர்வில் மோசடி,உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகிறது.
நீட் தேர்வில் மோசடி செய்த நபர் குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக விண்ணப்பித்தார்.அதற்காக அவர் மதுரையில் இரண்டு போலியான முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் போலியான ஒரு முகவரியும் தயாரித்து மூன்று தேர்வு மையங்களில் விண்ணப்பித்துள்ளார்.
மேலும் அந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளில் பணிபுரிவதாகவும் போலி ஆவணங்களையும், முகவரியையும் தயாரித்து உள்ளார். அதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதினார். அதில் அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றார்.
தொடர்ந்து புனேவில் உள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.டி., படிப்பதற்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினார்.அதன் பின் அவர் மருத்துவ மேற்படிப்பில் சேரவில்லை. இதனால் மருத்துவ கவுன்சிலுக்கு சந்தேகம் எழுந்தது.அவர்கள் உளவுப்பிரிவு போலீசார் மூலமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.