
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் வாரிசு, லியோ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பின்னர், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 68.
இப்படம் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பமான நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், லைலா, பிரபுதேவா,சினேகா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகிபாபு, அஜ்மல் அமீர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.
லியோ பட வெற்றிக்குப் பின் விஜய்யின் அடுத்த படமான விஜய் 68படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே இன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே வெளியான தகவல் மாதிரி The G.O.A.T அதாவது, The Greatest Of All Time என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் மாஸ் லுக்கில் பிகில் படத்திற்குப் பின் 2 வேடத்தில் நடித்துள்ளார். இதில் இவர் பைலட்டாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளை புதுவருடத்தை முன்னிட்டு தளபதியின் The Goat பட ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தை தெறிவிக்கவிட்டு,. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.