
இந்த உலகில் பல மொழிகளில் பாடல்கள் வெளியாகிறது. இதில், ஆங்கிலம், தமிழ் , கொரியன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகிறது.
அந்த வகையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கொரியன் பாடலான’ கங்னம் ஸ்டைல் ‘என்ற பாடல் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்து வைரலானது.
இந்தப் பாடல் கடந்த 2012 ஆம் ஆண்டு தென்கொரியாவைச் சேர்ந்த பிஎஸ்ஒய்(PSY) என்ற பாடகரின் குரலில் ‘( கங்னம் ஸ்டைல் ‘) பாடல் வெளியாகி மொழிகளை தாண்டி அனைவரின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் ஆண்டுகளை கடந்தாலும் இப்பாடலுக்கு மவுசு குறையவில்லை என்பதற்கேற்ப கூகுளின் யூடியூப் தளத்தில் இப்பாடல் ‘( கங்னம் ஸ்டைல் ‘) 500 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்பாடல் மேலும் சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.