
365 நாட்கள் ஓடிக் கழிந்தால் புது வருடம். 7 நாட்கள் கடந்து அடுத்த நாள் வந்தால் அது புதிய வாரம். 30 நாட்கள் கழிந்து அடுத்து ஒரு புதிய நாள் பிறந்தாள் அது புதிய மாதம். 24 மணி நேரம் போனால் அடுத்து வருவது புதிய நாள். 52 வாரங்கள் கடந்தோடிவிட்டால் அடுத்து வருவது புதிய வருடப் பிறப்பு.
இப்படி புதிய நாளும், வாரமும், மாதமும், வருடமும் பிறக்கின்றது. அது பூமி சூரியனைச் சுற்றிவருவதினால் ஏற்படுகின்ற இயற்கை நிகழ்வு. அது நாட்களைக் கணக்கிடுவதற்கான ஒரு வகைக் கணக்கு.
இந்தக் கணக்கு எப்போது நம்மை ஆட்கொள்கிறது. வயதாகும் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதன்பின் ஒரு நிறுவனத்தில் வேலை அல்லது மேற்படிப்பு. அதன்பின்னர் திருமணம். அதன்பின் மீண்டும் அவன் பெற்ற வயதின் சுழற்சியில் செய்த செயல் மாதிரி அவனது பிள்ளையை வாரிசை இதேபோன்ற செயலை செய்ய வைப்பது.
இது எல்லோரும் செய்வது.

சரி. இப்படியே நமக்கு விதிக்கப்பட்டதை மட்டுமே நாம் செய்யச் சித்தமாகயிருந்தால், நாம் எப்போது னாம் செய்ய நினைத்ததைச் சாதிப்பது?
இதற்கு நாம் பிறவியிலேயே சில்வர் ஸ்பூனோடு பிறந்த பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை. டெஸ்லா சி இ ஓ எலான் மஸ்கும், பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர் பெர்க்கும் இதைத்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
எதாவது புதிய முயற்சி.
எதாவது புதிய தேடல்
அதில் நிறைவுகாணும் அவரை உழைப்பு
திறமையின் மூலம் விளம்பரப்படுத்தல்
அதன் மூலம் சந்தைப்படுத்தல்
அதைப் பணமாக்குதல்
இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியம்தான். ஆனால் நாம் தான் மிகப்பெரிய இலக்குகளை மட்டுமே பகல்கனவாக வைத்துக் கொண்டு எதுவுமே நடக்கவில்லை என்று சோம்பிக்கிடக்கிறோம்.
எடுத்தவுடன் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற எண்ணுவதைவிட, இன்றைய நாளை நாம் எப்படிக் கடக்க வேண்டும் என்ற இயல்பான வாழ்க்கைப் படி நிலையைப் புரிந்து அதற்கேற்றபடி நாம் வாழ்கின்ற போது இந்த உலகம் நமக்கு அர்த்தப்படும்.
எல்லோராலும் முடியும்
இந்த வாய்ப்புகளை பிடித்தால்
வெற்றி நம் கவசமாகும்
வாழ்க்கை நம் வசப்படும்
அதற்கு நாம் முதலில் எதில் சாதிக்க வேண்டுமென்பதைத் திட்டமிட வேண்டும்.
சிறுவயதில் இருக்கும் ஆசைக்கு யார் செடியைப் போல் நீரூற்றி, அதற்கு உரமிட்டு, திறமையாலும், பயிற்சியாலும் மெருகேற்றி வருகிறார்களோ அவவர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் வேர்ல்ட் ரிகாட் படைத்த உசேன்போல்ட் போல் வெற்றி கிடைக்கும்
நம் இளைஞர்களுக்கு ஒரு சினிமாத்துறையின் மீதான மோகம் மட்டுமே பெரிய வெற்றி எனப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.
ஆனால் ஒரு தேயிலை தோட்டத்தொழிலாளி காடு மேடுகளில் அன்றைய நாளில் பத்திரமாக வேலை செய்து, பறித்த கொழுந்துகளை எடைபோட்டுத் தந்திவிட்டு, மீண்டும் பத்திரமாக தன் வீட்டிற்குச் சென்றாலே அது வெற்றிதான்.
இதேபோன்றுதான் ஒவ்வொரு தொழிலை மேற்கொள்பவர்களின் வாழ்விலும் அன்றைய பொழுதை அவர்கள் முழுதிருப்தியுடன், வருமானத்துடன் மேற்கொண்டு அன்றைய நாளை உபயோகரமாகக் கழிப்பதும் ஒரு சிறந்த வெற்றிதான்.
இதற்கு கோடீஸ்வரனாக இருந்து ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பார்டி நடத்துவதுதான் வெற்றி என்பதல்ல.
இன்று ஒரு செயலைச் செய்ய தீர்மானித்து, அதற்காக என்னென்ன முயற்சிகள், தேடுதல்களில் ஈடுபட வேண்டும், அதில் வெற்றி பெற இன்னும் எத்தனை தூரம் பயணப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து தெளிவுடன் தெரிந்து அறிந்து முன்னேறுவதும் பாதிவெற்றிதான்.

ஏனென்றால் வாழ் நாள் முழுவதும் அதற்காகப் பயணப்படலாம். ஆனால், அதை எப்படி எளிதாகப் புரிந்து, அதற்கான வழிகளை தெரிந்து நாம் பயணப்பட வேண்டும் என்ற நுட்பமும் நுண்மான் நுழைபுலும் அடைய நாம் கற்ற வேண்டும். இதற்குப் புத்தகமும், மனிதர்களுடன் தொடர்பும், தகவல் தொடர்பும் நமக்கு உதவும்.
இதைத்தான் ஏசு கிறுஸ்துவும், பாரதியும், மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும், விவேகானந்தரும் தன் குறுகிய வாழ்க்கையில் அதைச் செய்து மக்களுக்கும் தம் உயரிய போதனைகளை, செய்த லட்சியங்களின் செயலை சாட்சிடோடு விட்டுச் சென்றார்கள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தைவிட இன்று எத்தனையோ தொழில் நுட்ப முன்னேற்றம், இணையவளர்ச்சி, சமூக வலைதளங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
காணுமிடமெல்லாம் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.
ஆனால், நாம் தான் இன்னும் நம் துறையில் ஒருஅடி எடுத்துவைக்க தயக்கம் காட்டி வருகிறோம்.
இது நல்ல நாள்.இது நல்ல செயலைச் செய்ய ஏற்ற நாள் என்று எந்த எந்த நாளும் பார்க்க வேண்டாம். முன்னேறத்துடிப்பவனுக்கு எல்லா நாளும் நல்ல நாள், நல்ல நேரம்தான்.
இங்கு பாராட்டத்துடிப்பவர்களை, குற்றம்காணத் துடிப்பவர்களே அதிகம்.
நாளொரு மேனி பொழுதொருவண்ணம் வாய்ப்புகளைத் தேடி அலைவதைவிட வாய்ப்புகளை நாமே ஏன் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்று ஒருகணம் சிந்தித்தால் வெற்றிக் கோப்பை நம் கையில் விழுவதை தீர்க்க தரிசனமாகக் காண முடியும்.
யாரு ஒரு தேவதூதன் வந்து நம்மை தூக்கிவிடப்போவதில்லை.
இன்றைய தவறுகளைக் கலைந்து நாளைய சரியானதை காண முற்படுவோம்.
புத்தாண்டு என்பது கொண்டாட்டத்திற்கான நாளாகக் கருதாமல், நம்மிடமுள்ளா சிறு தவறுகளை கலைந்து, வெற்றி பெற நாம் இன்னும் எத்தனை தூரம் போராட வேண்டும். என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான ஒரு நேரத்தையும் கொடுக்க வேண்டும்.
70 வயதானாலும் சூப்பர் ஸ்டார் தன் முதல் படத்தில் நடிப்பது மாதிரி எப்படி ரஜினிகாந்த் சுறுசுறுப்புடன் இருக்கிறார் என்பதை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் சிறுவயது முதல் அவர் விரும்பி ஆசைப்பட்டு, அதில் முன்னேறி உச்சம் பெற்ற துறை. அதில் அவர் சிங்காசனத்தில் அவர் வீற்றிருக்கிறார்.
ஜாக்மாவும், அமேசான் நிறுவனம் ஜெப் பெகாசும் இன்றைய உலகின் டாப் பணக்காரர் என்ற நிலையைக் கனவு கண்டு அதை அடைய எத்தனை சவால்களை மேற்கொண்டிருப்பார்கள்?

இதேமாதிரி ஒவ்வொருக்கும் ஒரு துறையில் ஆசை இருக்கும். அது எழுத்துத்துறை, கலைத்துறை, ஆன்மீகத்துறை, டிராவல் துறை,மருத்துவம், கல்வி, ஓவியம், செயற்கை தொழில் நுட்பம், டிரைவிங், பேச்சு, பாடல், டீச்சிங் துறை, அரசியல், விவசாயம், விளையாட்டு என எத்துறையாயினும் அனைத்திலும், நாம் சாதிக்க முடியும் என்று உறுதிமொழி எடுப்படதற்கான நாளாக இப்புத்தாண்டை நாம் வரவேற்போம்.
வெற்றியை வாகை சூடுவோம். மகிழ்ச்சியை நாளும் அறுவடை செய்வோம். கவலைகளை, துன்பங்களை, கஷ்டங்களை ஏற்றுக்கொள்வோம். ஏனென்றால் மழைபெய்தால்தான் பூமிக்கு விளைச்சல், சூரிய ஒளி இல்லையேல் இப்பூமியில் உயிர்களில்லை என்பதை உணர்ந்தால் இங்கு எதுவும் நமக்குப் பாரமில்லை.
நன்றி வணக்கம்.
#சீவகன்