
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
ஏற்கனவெ செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி தோற்றது.
எனவே இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில், எல்கர் ( கேப்டன்), பெடிங்கம், பர்கர், டி ஜோர்ஜி, ஹம்சா, ஜேன்சன், மஹாராஜ், மார்க்கம், முல்டர், நிட்ஜ், பீட்டர்சன், ரபடா, ஸ்டப்ஸ்,வெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வரும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு ஜெயிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.